வணிகம்

ஜி7 நாடுகளின் கூட்டத்தில் ஐஎம்எப் நிர்வாக இயக்குநருடன் நிதியமைச்சர் நிர்மலா சந்திப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜி7 நாடுகளின் நிதியமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டம் ஜப்பானின் நிகாட்டா நகரில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக நிர்மலா சீதாராமன் ஜப்பான் சென்றுள்ளார்.

இந்த ஜி7 மாநாட்டின் ஒரு பகுதியாக, சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எப்) நிர்வாக இயக்குநர் கே.ஜியோர்ஜிவாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சந்தித்துப் பேசினார். மேலும், பிரேசில் நாட்டுநிதியமைச்சர் ஹடாட் பெர்னான்டோவையும் நிதியமைச்சர் சந்தித்தார்.

இதுதொடர்பாக, நிதியமைச்சகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “உள்கட்டமைப்பு, பன்முகமேம்பாட்டு வங்கிகளை வலுப்படுத்தல், கடன் தாக்கம் மற்றும்டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (டிபிஐ) ஆகிய விவகாரங்கள் குறித்து இருநாட்டு நிதியமைச்சர்களும் விரிவாக விவாதித்தனர். அப்போது, ஜி20 அமைப்புக்கான இந்தியாவின் தலைமைத்துவத்தில் உலகளாவிய பொருளாதார பிரச்சினைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவத்தை பிரேசில் நிதியமைச்சர் பாராட்டினார்’’ என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

2024-ல் ஜி20 அமைப்பின் தலைமையை பிரேசில் ஏற்பதற்கு மத்திய நிதியமைச்சர் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடு ஜி20 தலைவர் பதவியை டிச. 1, 2023 முதல் நவ. 30,2024 வரை ஏற்க உள்ளது.

SCROLL FOR NEXT