கோப்புப்படம் 
வணிகம்

ஏப்ரல் மாதத்தில் 12,590 டிராக்டர்களை விற்பனை செய்து சோனாலிகா சாதனை

செய்திப்பிரிவு

சென்னை: சோனாலிகா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 12,590 டிராக்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

இண்டர்நேஷனல் டிராக்டர்ஸ் நிறுவனத்தின் 'சோனாலிகா' நாட்டின் முன்னணி ஏற்றுமதி டிராக்டர் பிராண்டாகத் திகழ்கிறது. இந்நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 12,590 டிராக்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த டிராக்டர் விற்பனை சந்தையில் 1.9% சந்தையை இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் ரமன் மிட்டல் கூறும்போது, “அதிகபட்ச விற்பனையின் மூலம் புதிய நிதி ஆண்டின் தொடக்கம் அமைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. நிறுவனத்தின் மிகச் சிறப்பான அடித்தளம், பல்வேறு தயாரிப்புகளை அளிப்பதற்கான திறன் ஆகியன தொடர் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

நடப்பு 2023-24 நிதி ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விற்பனை இலக்கை நிறுவனம் நிச்சயம் எட்டிவிடும் என்ற நம்பிக்கை அதிகரித்து உள்ளது. தொடர்ந்து குறைந்த விலையில் புதிய தயாரிப்புகள் விவசாயிகளுக்கு 2024-ம் நிதி ஆண்டிலும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் முன்னிருக்கும் மிகப் பெரும் சவால்” என்றார்.

SCROLL FOR NEXT