நடப்பு நிதி ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கான நிதிப்பற் றாக்குறை 2.4 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட பற்றாக்குறையில் முதல் இரண்டு மாதங்களில் 45.6 சதவீதத்தை எட்டிவிட்டது.
நாட்டின் வருமானத்துக்கும் செலவுக்கும் உள்ளிட்ட இடைவெளிதான் நிதிப்பற்றாக்குறை. கடந்த வருடம் இதே காலத்தில் நிதிப்பற்றாக்குறை எதிர்பார்க் கப்பட்ட அளவில் 33.3 சதவீத அளவுதான் எட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
2013-14-ம் நிதி ஆண்டில் 5.08 லட்சம் கோடி ரூபாய் அல்லது ஜி.டி.பி.யில் 4.5 சதவீதம் என்ற நிலையில் நிதிப்பற்றாக்குறை இருந்தது. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் ஜி.டி.பி.யில் 4.9 சதவீத அளவு நிதிப்பற்றாக்குறை இருந்தது. 2016-17-ம் நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறையை 3 சதவீத அளவில் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது.
இதற்கு முந்தைய அரசின் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நிதிப்பற்றாக்குறை 4.1 சதவீத அளவுக்கு இருக்கும் என்று இடைக்கால பட்ஜெட்டில் தெரிவித்தார். இந்த நிலையில் ஜூலை 10ம் தேதி அருண் ஜேட்லி பட்ஜெட்டில் நிதிபற்றாக்குறையை குறைக்கு அதுசம்பந்தமான கொள்கைகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.