வணிகம்

ஐ.ஐ.பி. வளர்ச்சி 4.7%

செய்திப்பிரிவு

இந்தியாவின் தொழில் உற்பத்தி (ஐ.ஐ.பி) கடந்த மே மாதத்தில் 4.7 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது. 2012-ம் ஆண்டுக்குப் பிறகு தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

சுரங்கம், தொழிற்சாலை ஆகியவற்றில் மார்ச் மாதம் 0.5 சதவீத அளவுக்கு சரிவு காணப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் கீழாகவே உள்ளது. தொழில்துறை உற்பத்தி குறைந்ததும் மற்றும் முதலீடுகள் குறைந் ததும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

வளர்ச்சியானது விரைவான தாகவும் மாதத்துக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் வகையிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் அரசு எதிர்பார்க்கும் வளர்ச்சி கிடைக்கும் என்று அறிக்கை கூறுகிறது.

பொருளாதார வளர்ச்சி தற்போது மீண்டு வரும் நிலையில் எல் நினோ உள்ளிட்ட மழை குறைவு காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு அதனால் பொருளாதார வளர்ச்சி குறையும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT