சென்னை: வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், முதல்முறையாக தமிழில் ‘வருமானத்தில் வரி பிடித்தம் செய்பவர்களுக்கான கையேடு' வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிவருமான வரித் துறை அலுவலகம் சார்பில், வரி பிடித்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தொழிற்சாலைப் பிரதிநிதிகள், வரி செலுத்துவோர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர்.
இதில் பேசிய வருமான வரித்துறை தமிழ்நாடு, புதுச்சேரி முதன்மை தலைமை ஆணையர்ஆர்.ரவிச்சந்திரன், வரி பிடித்தம்செய்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
வருமான வரித் துறை தலைமை ஆணையர் (டிடிஎஸ்)எம்.ரத்தினசாமி, வரி வசூல்முறைகள் குறித்து விளக்கியதுடன், அனைவரும் முறையாக வரி செலுத்தி, தேசத்தின் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், முதல்முறையாக தமிழில் ‘வருமானத்தில் வரி பிடித்தம் செய்பவர்களுக்கான கையேடு' வெளியிடப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை தலைமை ஆணையர் ஆர்.ரவிச்சந்திரன் இந்தக் கையேட்டை வெளியிட்டதுடன், வரி செலுத்துவது தொடர்பான தகவல்கள் அடங்கிய வீடியோவையும் வெளியிட்டார். இந்த வீடியோக்களை https://tnincometax.gov.in என்ற இணைய தளத்திலும், https://youtube.com/@incometax tamilnaduandpuduc 9090 என்றயூடியூப் சேனலிலும் பார்க்கலாம்.
இந்தக் கூட்டத்தில், வருமான வரித் துறை சென்னை ஆணையர் (டிடிஎஸ்) சி.திரிபுர சுந்தரி, கோவை ஆணையர் (டிடிஎஸ்) இயாஸ் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.