வணிகம்

ஏப்.26, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.26) சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ரூ.45,136-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அட்சய திருதியையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் ஏப்.22, 23 ஆகிய இரண்டு நாட்களாக விற்பனை களைகட்டியது. மேலும், தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்தும் இருந்தது. இதனால் நகைவாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (புதன்கிழமை) கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.5,642-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ.45,136-க்கு விற்பனையாகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,872-க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.80,200-ஆக இருக்கிறது.

SCROLL FOR NEXT