வணிகம்

சேவை துறை ஏற்றுமதி ரூ.38.80 லட்சம் கோடி - எஸ்இபிசி கணிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (எஸ்இபிசி) தலைவர் சுனில் ஹெச் தலட்டி நேற்று கூறியதாவது: வர்த்தக அமைச்சக புள்ளிவிவரத்தின்படி 2021-22 நிதியாண்டில் சேவைகள் துறையின் ஏற்றுமதி 25,400 கோடி டாலராக இருந்தது.

இது, 2022-23 நிதியாண்டில் 42 சதவீத வளர்ச்சியுடன் 32,272 கோடி டாலரை எட்டியுள்ளது. சேவை ஏற்றுமதி தொடர்ந்து சிறப்பான வகையில் ஏறுமுகம் கண்டு வருவதையடுத்து நடப்பு நிதியாண்டில் அது 40,000 கோடி டாலரை எட்டும். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.38.80 லட்சம் கோடி. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT