வணிகம்

பால் பொருட்கள் இறக்குமதி இல்லை: அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மாடுகளுக்கு தோல் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பால் உற்பத்தி சார்ந்து நெருக்கடியை எதிர் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து மத்திய பால் வளத் துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா கூறியதாவது: இந்தியாவில் பால் மற்றும் பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் பொய்யானது. தற்சமயம் பால் தேவை அதிகரித்து இருக்கிறது. விநியோகத்தை சீர்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்தியா பால் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யாது. உள்நாட்டில் பால் உற்பத்திக்கான நிறைய வாய்ப்புகள் பயன்படுத்தப்படும். எனவே, மக்கள் கவலைப்பட தேவையில்லை. இவ்வாறு புருஷோத்தம் கூறினார்.

SCROLL FOR NEXT