வணிகம்

வாட்ஸ்அப் மூலம் வங்கி சேவை வழங்கும் போஸ்ட் பேமென்ட் வங்கி

செய்திப்பிரிவு

சென்னை: இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி, வாட்ஸ்அப் மூலம் வங்கி சேவையை வழங்க உள்ளது.

இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி தனது வங்கி சேவையை வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வழங்க உள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்கள் எளிதாக வங்கி சேவையை பெற முடிவதோடு, வீடு தேடி வரும் வங்கி சேவையையும் பெற முடியும். தங்களது இருப்பிடத்துக்கு அருகில் உள்ள அஞ்சல் நிலையங்கள் குறித்த தகவல்களையும் பெற முடியும்.

பல மொழிகளில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. இதனால், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் தங்களுக்கு தெரிந்த மொழியை தேர்வு செய்து, அதன்மூலம் வங்கி சேவைகளை எளிதாக பெறமுடியும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT