கோப்புப்படம் 
வணிகம்

சிட்டி குழும சிஇஓ ஜேன் பிராசர் சென்னையில் ஆலோசனை

செய்திப்பிரிவு

சென்னை: அமெரிக்காவை தலைமையக மாகக் கொண்ட சிட்டி குழுமம் வங்கி மற்றும் நிதி சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. இக்குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஜேன் பிராசர் கடந்த 31-ம்தேதி சென்னை வந்திருந்தார்.

ஜேன் தலைமையிலான குழுவினர் சென்னையில் உள்ள சிட்டி சொலூஷன்ஸ் மையத்தை (சிஎஸ்சி) பார்வையிட்டனர். பின்னர் குளோபல் கேப்பபிளிட்டி சென்டர்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து சிட்டி இந்தியா சிஇஓ அஷு குல்லர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. சிட்டி குழும சிஇஓ ஜேன் பிராசர் இந்தியாவுக்கு வந்தது இதுதான் முதல் முறை. உலகில் 95 நாடுகளில் எங்கள் குழுமம் செயல்பட்டு வருகிறது. இதில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வர்த்தகத்துக்கு கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக எங்கள் சிட்டி சொலூஷன்ஸ் மையம் ஆதரவு அளித்து வருகிறது.

தொழில்நுட்பம், இயக்கம், பகுப்பாய்வு, நிதி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை எங்கள்மையம் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் உள்ளவாய்ப்பை பயன்படுத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எங்கள் குழுமம் மேற்கொண்டு வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் எங்கள் சிஇஓ இங்கு வருகை தந்துள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT