புதுடெல்லி: கடந்த மார்ச் மாதத்தில் ரூ.1.60 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது சென்ற ஆண்டு மார்ச் மாதத்தை விட 13 சதவீதம் அதிகம்.
இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.29,546 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.37,314 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.82,907 கோடி, செஸ்ரூ.10,355 கோடி ஆகும். இறக்குமதி வழியான ஜிஎஸ்டி 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2017-ல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு. 2022 ஏப்ரலில் ரூ.1.68 லட்சம் கோடி வசூலானது. இந்நிலையில் 2023 மார்ச்சில் வசூலான ரூ.1.60 லட்சம் கோடியானது இரண்டாவது அதிகபட்ச வசூலாக உள்ளது.
ஒட்டுமொத்த அளவில் 2022-23 நிதி ஆண்டில் ரூ.18.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது.இது 2021-22 நிதி ஆண்டுடன் ஓப்பிடுகையில் 22 சதவீதம் அதிகம் ஆகும்.