வணிகம்

மார்ச் 29, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 29) சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.44,360-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, இரண்டு நாட்களாக சற்று குறைந்துவந்தது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,545-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.44,360-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.47,912 க்கு விற்பனையாகிறது.

இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.76,000-ஆக இருக்கிறது.

SCROLL FOR NEXT