வணிகம்

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.15 சதவீதமாக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வருங்கால வைப்பு நிதிக்கான (பி.எப்) வட்டி விகிதத்தை 2022-23- நிதியாண்டுக்கு 8.15 சதவீதமாக அதிகரிக்க ஓய்வூதிய நிதியமான இபிஎஃப்ஓ முடிவு செய்துள்ளது.

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்படும் தொகைக்கு கடந்த ஆண்டில் வட்டி விகிதமானது 8.1 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டது. இது, கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மிகவும் குறைந்தபட்ச அளவாகும்.

இந்த நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அறக்கட்டளை வாரியம் மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இதில், 2022-23 ஆண்டுக்கான பி.எப். வட்டியை 0.05 சதவீதம்உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பி.எப். வட்டி விகிதம் 8.1 சதவீதத்திலிருந்து 8.15 சதவீதமாக அதிகரிக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்த பரிந்துரையை நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் ஒப்புதலுக்குப் பிறகு வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்படும். அதன் பிறகே, இபிஎஃப்ஓ அமைப்பு சந்தாதாரர்களின் கணக்குகளில் வட்டி வரவு வைக்கப்படும் என்று தொழிலாளர் அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் ரூ.11லட்சம் கோடி உள்ளது. இந்ததொகைக்கு 2022-23 நிதியாண்டுக்கு 8.15 சதவீதம் வட்டி வழங்கமுடிவெடுத்துள்ளதை அடுத்து ரூ.90,000 கோடிக்கும் அதிகமானதொகையை சந்தாதாரர்கள் கணக்கில் செலுத்த வேண்டியுள்ளது.

கடந்த 2021-22 நிதியாண்டில் ரூ.9.56 லட்சம் கோடிக்கு ரூ.77,424.84 கோடி வட்டியாக வழங்கப்பட்டது என இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது.

பிஎப். வட்டி விகிதம் கடந்த 2018-19 நிதியாண்டில் 8.65 சதவீத மாக இருந்த நிலையில் 2019-20-ல் ஏழு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாக 8.5 சதவீதமாக 2020 மார்ச் மாதத்தில் குறைக்கப்பட்டது என்பது குறிப் பிடத்ததக்கது.

SCROLL FOR NEXT