மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வெர்னா கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்பவிலை ரூ.10.90 லட்சம் முதல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக பவர், அதிக வசதி என வெர்னா கார் புதிய வடிவில் வெளிவந்துள்ளது.
ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், இந்தியாவில் மிகவும் பிரபலமான அதன் ‘வெர்னா' செடான் காரை, புதுப்பித்து சந்தையில் மீண்டும் களமிறக்கியுள்ளது.
1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள வெர்னா கார், சென்னையில் ஹுண்டாய் நிறுவனத்தின் ஆலையில் தயாரிக்கப்படுகிறது. மேலும், இந்த காரை உலகளவில் ஏற்றுமதி செய்யவும், இந்தியாவில் விற்பனையை இருமடங்காக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.
பாதுகாப்பை பொறுத்த வரையில், 30-க்கும் மேற்பட்ட அம்சங்கள் இப்புதிய வகை வெர்னாவில் சேர்க்கப்பட்டுள்ளன. நீளம், அகலம், வீல் பேஸ், உயரம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் புதிய வகை வெர்னாவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேனுவல் மற்றும் ஆட்டோ கியர் வசதிகளை கொண்ட புதிய வகை வெர்னா காரின் விலை, மாடல்களுக்கு ஏற்ப ரூ.10.90 லட்சம் முதல் ரூ. 17.38 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காரின் வெளிப்புறம் ஸ்பிளிட் ஹெட்லேம்ப் டிசைன், எல்இடி டிஆர்எல், முன்புறம் பம்ப்பர், கிரில், பம்ப்பரின் மேல் எல்இடி லைட் பார், டுயல் டோன் அலாய் வீல் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை இப்புதிய வகை வெர்னா உள்ளடக்கியுள்ளது.
உள்புற சிறப்பம்சங்கள்: காரின் உள்புறத்தில் சன்ரூஃப், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம் உள்படபல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. புதிய வெர்னா கார் அறிமுக நிகழ்ச்சி நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது.