கோப்புப்படம் 
வணிகம்

நிதிநிலையை சரி செய்ய ரூ.34,900 கோடி பிவிசி ஆலை திட்ட பணிகளை நிறுத்தியது அதானி குழுமம்

செய்திப்பிரிவு

அகமதாபாத்: அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு ரூ.11.50 லட்சம் கோடி சரிந்தது.

ஹிண்டன்பர்க் அறிக்கையால், அதானி குழும முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றனர். இதனால், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சி களை அதானி குழுமம் மேற்கொண்டு வருகிறது. வங்கிகளிடமிருந்து பெற்ற கடன்களை காலக்கெடுவுக்கு முன்னதாகவே செலுத்தி வருகிறது.

இந்தச் சூழலில், குழுமத்தின் நிதி நிலைமையை சீரமைக்கும் நடவடிக்கையில் அதானி குழுமம்இறங்கியுள்ளது. அதன்பகுதியாக,முந்தரா பெட்ரோகெம் நிறுவனத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் ரூ.34,900 கோடி மதிப்பிலான பிவிசி ஆலை திட்டத்தை நிறுத்தி யுள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக 2021-ல் முந்தரா பெட்ரோகெம் நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் கீழ் முந்த்ரா துறைமுகத்தில் பிவிசி ஆலை அமைக்க திட்டமிடப்பட்டது. தற்போது குழுமத்தின் நிதிச் சுழற்சியைக் கணக்கில் கொண்டு பிவிசி ஆலை திட்டம் நிறுத்தப் படுகிறது.

இது தொடர்பாக, இத்திட்டம் தொடர்புடைய வியாபாரிகள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு அதானி குழுமம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதில், அதானி குழுமத்திலிருந்து அடுத்த அறி விப்பு வரும் வரையில் பிவிசி ஆலை தொடர்பான அனைத்துச் செயல்பாடுகளையும் நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT