பெங்களூரு: மார்ச் 17ம் தேதி உலக உறக்க தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சில தனியார் நிறுவனங்கள், உறக்கத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நேற்று நடத்தின.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த படுக்கை மெத்தை தயாரிக்கும் ‘வேக் பிஃட்’ நிறுவனம் நேற்று அதிகாலையில் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது.
அதில், “மார்ச் 17-ம் தேதி உலக உறக்க தினத்தை முன்னிட்டு, நமது நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே இந்த நாளில் அனைத்து ஊழியர்களும் நிம்மதியாக உறங்கி, உடல் ஆரோக்கியத்தை பேணுமாறு நிறுவனம் கேட்டுக்கொள்கிறது” என குறிப்பிட்டுள்ளது.