வணிகம்

வருமான வரி ரிட்டர்ன் தாக்கல்: இ-சரிபார்ப்பு திட்டத்தின் கீழ் 68,000 கணக்குகள் சோதனை

செய்திப்பிரிவு

வருமான வரி ரிட்டர்ன் தாக்கலில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் 2021-ம் ஆண்டு இ-சரிப்பார்ப்புத் திட்டத்தைமத்திய நேரடி வரிகள் வாரியம்கொண்டு வந்தது. இதன்படி, வருமான வரி ரிட்டன் தாக்கலின்போது தவறான தகவலை பதிவு செய்திருந்தால், அதை வரிதாரர்கள் 3 ஆண்டுகளுக்குள் மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் வரிதாரர்கள் தாங்கள் பதிவு செய்த தவறான தகவல்களை சரிசெய்கிறார்களா என்பதை மத்திய நேரடி வரிகள் வாரியம் சோதனை செய்து வருகிறது.

இதன்படி, 2019-20 நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கலில் அதிக மதிப்பு கொண்ட 68,000 கணக்குகளை சோதனைக்கு எடுத்துள்ளது. அதில் வரிதாரர்கள் பதிவேற்றம் செய்துள்ள தகவல்களின் உண்மைத் தன்மையை சோதித்து வருகிறது. தகவல்களில் முரண்பாடு காணப்பட்டால் அது தொடர்பாக வரிதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

இது குறித்து நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா கூறுகையில், “இதுவரையில், 38,000 வரிதாரர்கள் முறையாக பதில் அளித்துள்ளனர். 15 லட்சம் பேர் இந்தத் திட்டத்தின் கீழ் தாங்கள் பதிவு செய்துள்ள விவரங்களில் தவறுகளைத் திருத்தியுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.1,250 கோடி வரி கிடைத்துள்ளது. அதேசமயம், நோட்டீஸ் அனுப்பப் பட்டவர்களில் 33,000 பேர் இன்னும்பதில் வழங்கவில்லை. வரிதாரர்கள் தாங்களாகவே தங்கள் வரிவிவரங்களைப் புதுப்பித்துக்கொண்டால், அவர்களின் கணக்குசோதனைக்கு எடுத்துக்கொள்ளப் படாது” என்று தெரிவித்தார்.

தகவல்களில் முரண்பாடு காணப்பட்டால் வரிதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

SCROLL FOR NEXT