வணிகம்

அதானி குழுமத்தில் அதிக முதலீடு - சிகியூஜி பார்ட்னர்ஸ் நிதி நிறுவனம் திட்டம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சிகியூஜி பார்ட்னர்ஸ் நிதி நிறுவனத்தின் நிறுவனர் ராஜீவ் ஜெயின் கூறியதாவது: அதானி குழுமத்தில் சிகியூஜி பார்ட்னர்ஸ் அண்மையில் 1.9 பில்லியன் டாலரை முதலீடு செய்தது. பொதுவாக, வருவாய் மற்றும் செயல்திறன் அடிப்படையில் முதலீடு அதிகரிக்கப்படுகிறது.

அந்த வகையில் அதானி குழுமத்தில் முதலீடுகளை சிகியூஜி பார்ட்னர்ஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் வாடிக்கையாளர்களிடமிருந்து எதிர்பார்த்ததைவிட நேர்மறையான பதில் கிடைத்துள்ளது. இவ்வாறு ராஜீவ் ஜெயின் கூறினார்.

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 3.4 சதவீத பங்குகளை 662 மில்லியன் டாலருக்கு சிகியூஜி வாங்கியுள்ளது. அதைத்தவிர, அதானி போர்ட்ஸ் 4.1 சதவீத பங்குகளை 640 மில்லியன் டாலருக்கும், அதானி டிரான்ஸ்மிஷன் 2.5 சதவீத பங்குகளை 230 மில்லியன் டாலருக்கும், அதானி கிரீன் எனர்ஜி 3.5 சதவீத பங்குகளை 340 மில்லியன் டாலருக்கும் சிகியூஜி நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT