வணிகம்

பிப்.28, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று செவ்வாய்க்கிழமை (பிப்.28) சவரனுக்கு ரூ.48 உயர்ந்து, ரூ.41,656-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து இறங்கி வந்தது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து, ரூ.5,207-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.48 உயர்ந்து, ரூ.41,656-க்கு விற்பனையாகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.44,552க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.69.20-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.69,200-ஆக இருக்கிறது.

SCROLL FOR NEXT