வணிகம்

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 351 புள்ளிகள் சரிவு

செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (திங்கள்கிழமை) வர்த்தகம் வீழ்ச்சியுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 312 புள்ளிகள் சரிவடைந்து 59,151 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 75 புள்ளிகள் சரிவடைந்து 17,390 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வாரத்தின் முதல்நாளான இன்று வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. காலை 09:59 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 351.11 புள்ளிகள் சரிவடைந்து 59,112.82 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 76.75 புள்ளிகள் சரிவடைந்து 17,389.05ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பாதமான சூழல், வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வரும் செய்திகள் முதலீட்டாளர்களிடம் ஏற்படுத்தியுள்ள கவலை போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடனேயே திங்கள்கிழமை வர்த்தகத்தைத் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை நெஸ்ட்லே இந்தியா, ஹெச்டிஎஃபிசி பங்குகள் உயர்வில் இருந்தன. ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐடிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், விப்ரோ, டாடா மோாட்டார்ஸ் ஆகிய பங்குகள் சரிவில் இருந்தன.

SCROLL FOR NEXT