வணிகம்

காலநிலைக்கேற்ற ஸ்மார்ட் வேளாண்மை சர்வதேச அமைப்பில் இணைந்தது இந்தியா

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: சர்வதேச அமைப்பான காலநிலைக்கான வேளாண்மை புத்தாக்க அமைப்பில் இந்தியா இணைந்துள்ளது.

அமெரிக்காவும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து காலநிலைக்கான வேளாண்மை புத்தாக்க அமைப்பை (ஏஐஎம்4சி) கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கின. காலநிலைக்கேற்ற ஸ்மார்ட் வேளாண்மை மற்றும் உணவு நடைமுறை புத்தாக்க திட்டங்களுக்கான நிதியுதவி மற்றும் ஆதரவை முடுக்கி விடுவதுதான் இந்த அமைப்பின் நோக்கம்.

இந்நிலையில், இஸ்ரேல், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் கூட்டமைப்பின் (ஐ2யு2) வர்த்தக ரீதியிலான கூட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சக இணைச் செயலாளர் தம்மு ரவி பங்கேற்றார்.

இதுகுறித்து வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏஐஎம்4சி திட்டத்தில் இந்தியா இணைந்துள்ளது. இதுவரை 42 நாடுகளின் அரசுகள் உட்பட மொத்தம் 275-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்துள்ளன. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 800 கோடி டாலர் முதலீடு திரட்டப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT