வணிகம்

சோலார் கட்டமைப்பு விரிவாக்கம் 27% அதிகரிப்பு: 2030-க்குள் 280 ஜிகாவாட்ஸ் இலக்கு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் சோலார் கட்டமைப்பு விரிவாக்கம் 2022-ம் ஆண்டில் 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக மெர்காம் இந்தியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டில் 10.2 ஜிகாவாட்ஸ் அளவில் சோலார் கட்டமைப்பு நிறுவப்பட்ட நிலையில் 2022-ல் 13 ஜிகாவாட்ஸ் கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறது. 2030-க்குள் நாட்டில் 280 ஜிகாவாட்ஸ் சோலார் கட்டமைப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது நாட்டின் மொத்த சோலார் கட்டமைப்பு 63 ஜிகாவாட்ஸாக உள்ளது.

இதுகுறித்து மெர்காம் இந்தியா அறிக்கையில், “2030-ம் ஆண்டுக்குள் 280 ஜிகாவாட்ஸ் சோலார் கட்டமைப்பை உருவாக்கஆண்டுக்கு சராசரியாக 27 ஜிகாவாட்ஸ் விரிவாக்கம் செய்ய வேண்டும்.

ஆனால், தற்போது அதில் பாதி அளவிலே விரிவாக்கப்படுகிறது. எனவே சோலார் கட்டமைப்பு விரிவாக்கத்தில் உள்ள சிக்கல்களை தீர்வுகாணும் வகையில் கொள்கைகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT