கூகுள் நிறுவனத்தின் முதன்மை வர்த்தக அதிகாரி நிகேஷ் அரோரா அந்த நிறுவனத்திலிருந்து விலகி இருக்கிறார். இந்தியாவில் பிறந்தவரான இவர் கூகுள் நிறுவனத்தில் சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றியவர்.
ஜப்பான் நாட்டு நிறுவனமான சாப்ட் வங்கியின் துணைத்தலைவராக அரோரா பொறுப்பேற்கப்போவதாக கூகுள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி லாரி பேஜ் தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் அவரை பார்த்த ஞாபகம் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். நிகேஷ் சிறந்த தலைவராக மட்டுமல்லால் கூகுள் நிறுவனத்தின் பணியாற்றும் பலருக்கும் ஆலோசகராக இருந்தவர், என்னையும் சேர்த்து. அவரிடம் நிறைய கற்றுக்கொண்டோம் என்று லாரி பேஜ் தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார்.