மத்திய அமைச்சரவை அனுப்பிய 24 மணி நேரத்திற்குள் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள சட்டங்களில் இதுவும் ஒன்றாகவும். வங்கிகளின் வாராக் கடனை சமாளிக்க ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் அவசரச் சட்டம் இது.
வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக் கடன் ரூ. 7 லட்சம் கோடிக்கும் இந்த அவசரச் சட்டம் தீர்வு காணுமா? அல்லது வாராக் கடனை வசூலிக்க இந்த அவசரச் சட்டம் உதவுமா? என்று அறியும் முன்பு அவசரச் சட்டத்தின் பிரிவுகளை நன்கு அலசி ஆராய்ந்தாலே விடை கிடைத்துவிடும்.
1949-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வங்கி ஒழுங்குமுறை சட்டத்தில் 35ஏஏ மற்றும் 35 ஏபி என்ற இரு புதிய பிரிவுகள் தற்போதைய அவசர சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
35 ஏஏ பிரிவானது மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு உரிய வழிகாட்டுதலைப் பிறப்பிக்க அதிகாரம் அளிக்கிறது. நஷ்டத் தில் மூடிய ஆலைகளின் சொத்துகளை விற்பதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுப்பதற்கும், திவால் நடவடிக் கைகளை தொடரவும் வழி வகுக்கிறது.
35ஏபி பிரிவானது வாராக் கடன் சார்ந்த சொத்துகளை விற்பதற்கான வழிகாட்டு தலை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும். இதற்குத் தேவையான குழுக்களை அமைப்பது, வங்கிகள் மற்றும் தொழில் துறையினருக்கான ஆலோசனைகளை அளிப்பதற்கான குழுக்களை அளிப்பது உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.
வாராக் கடனை செலுத்தாத நிறுவனங் களின் சொத்துகளை விற்பது தொடர்பாக வங்கிகள் இனிமேலும் காலம் தாழ்த்துவதை அரசும், ரிசர்வ் வங்கியும் அனுமதிக்காது. அனைத்துக்கும் மேலாக வாராக் கடன் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டிய நிர்பந்தம் வங்கிகளுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல வழங்கப்பட்ட கடன்களை மாற்றி அமைப்பது உள்ளிட்ட விஷயங்களில் வங்கிகளுக்கு ஆர்பிஐ உதவும். ஆனால் ரிசர்வ் வங்கிக்கு உள்ள அன்றாட அலுவல் பணியில் ஒவ்வொரு வங்கியின் வாராக் கடன் பிரச்சினையையும் தீர்க்க நேரம் இருக்குமா என்பதற்கு காலம்தான் பதிலாக இருக்கும்.
கடனை திரும்ப செலுத்துவதற்கு போதிய வசதி இருந்தும் கடனை செலுத்தாத (வில்ஃபுல் டிபால்டர்) கடன்தாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் அவசர சட்டத்தில் அதற்கான வழிவகை எதுவும் காணப்படவில்லை. இது வாராக் கடன் வசூலில் மிகப் பெரிய தேக்க நிலையை உருவாக்கும் என்று இத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம் வாராக் கடனை கையாள்வதில் வங்கிகளுக்கு நெகிழ்வுத் தன்மை கொண்டதாக விதிகள் உள்ளன. அதேபோல கடன் வழங்கி திரும்பாத அதிகாரிகள் மீது எதிர்காலத்தில் நடவடிக் கை எடுக்கப்படும் என்பதிலிருந்து பாது காப்பு அளிக்கும் அம்சங்கள் இருப்பதால், அதிகாரிகள் கடன் வழங்குவது குறையும் என்ற நிலை மாறும்.
வங்கிகளின் வாராக் கடன் பிரச்சி னையைச் சமாளிக்க முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு மேற்கொண்ட விதிமுறைகளின் நீட்சியாகவே இந்த அவ சர சட்ட விதிகள் அமைந்துள்ளன. திவால் மசோதா கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட் டது. இது மிகவும் புரட்சிகரமான விதி என அப்போது வெகுவாக பாராட்டப்பட்டது. ஆனால் ஓராண்டாகியும் இது இன்னமும் வங்கிகளால் முழுமையாக செயல்படுத்தப் படவில்லை.
ஐசிஐசிஐ வங்கி மட்டும் இன்னோ வென்டிவ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மீது இந்தப் பிரிவில் அதாவது நிறுவனங்களுக் கான திவால் நடவடிக்கைகளை மேற் கொண்டது. ஆனால் சட்டச் சிக்கலில் அது மாட்டிக் கொண்டது. இதனால் வங்கிகள் பொதுவாக இந்த நடைமுறையை ஆர்வமாக பின்பற்றுவதற்கான வாய்ப்பு கள் மிகக் குறைவு என்பது தெளிவு.
பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் விகிதம் 17 சதவீதமாக உள்ளது. தனியார் வங்கிகளில் இது 7 சதவீத அளவுக்கு உள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் 6 சதவீத அளவுக்கு உள்ளது.
வாராக் கடன் அதிகரிப்புக்கான அடிப் படை பிரச்சினையை அவசர சட்டம் ஆராய வில்லை. வங்கிகள் எதிர்கொள்ளும் பிரச்சி னைக்கு தீர்வும் இதில் இல்லை. எதிர்காலத் தில் வாராக் கடன் அளவு அதிகரிக்காமல் இருக்க தகவல் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால் அடிப்படை தீர்வுகளைக் கண்டறியாமல் அறுவை சிகிச்சைக்கு வழிகோளுவதாக அவசரச் சட்டம் அமைந்துள்ளது.
வாராக் கடன் கணக்குகளை இரு வகை யாகப் பிரிக்கலாம். முதலாவது தொழில் துறையில் ஏற்பட்ட பிரச்சினையால் கடன் திரும்ப செலுத்த முடியாத சூழல் மற்றொன்று வேண்டுமென்றே செலுத்தாத பிரிவினர், வழக்கமாக வங்கிக் கடன் பெற்று ஏமாற்றும் பேர்வழிகள்.
வாராக் கடன் பிரச்சினைக்கு புதிய அவசரச் சட்டம் தீர்வாக அமையும் என்று மத்திய வருவாய்த்துறைச் செயலர் அசோக் லவாசா தெரிவித்துள்ளார். இந்த சட்டப் பிரிவு மூலம் எந்த அளவுக்கு வாராக் கடன் அளவைக் குறைக்க முடியும் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என தெரிவித்த அவர், வாராக் கடனை வசூலிக்க இந்த சட்டம் உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அவசரச் சட்டம் வாராக் கடனை வசூலிக்க உதவுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.