வணிகம்

மத்திய அரசுக்கு இந்தியன் வங்கி டிவிடெண்ட்

செய்திப்பிரிவு

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் வங்கி 2013-14-ம் நிதி ஆண்டுக்கான இறுதி ஈவுத் தொகையை (டிவிடெண்ட்) மத்திய அரசுக்கு அளித்தது. மத்திய அரசின் பங்குக்கு 17 சதவீத ஈவுத் தொகை மத்திய நிதி அமைச்சரிடம் அளிக்கப்பட்டது.

இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.எம். பாசின், செயல் இயக்குநர்கள் பி. ராஜ்குமார், மகேஷ் குமார் ஜெயின் ஆகியோர் ரூ. 90.61 கோடிக்கான காசோலையை நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் வழங்கினர். ஜனவரி மாதம் ரூ. 103.15 கோடிக்கான இடைக்கால ஈவுத் தொகையை ஏற்கெனவே வழங்கியது.

SCROLL FOR NEXT