வணிகம்

ஜூலை 1-ம் தேதி முதல் எகானமி வகுப்பு விமான கட்டணம் குறையும்

செய்திப்பிரிவு

புதிய ஜிஎஸ்டி வரி விகிதங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு எகானமி வகுப்பு விமான கட்டணம் குறையும். தற்போது 6 சதவீதமாக இருக்கும் வரி, ஜூலை 1-ம் தேதிக்கு பிறகு 5 சதவீதமாக குறையும். ஆனால் பிஸினஸ் வகுப்பு உயர இருக்கிறது. தற்போது 9 சதவீதமாக இருக்கும் வரி, ஜூலை 1-ம் தேதிக்கு பிறகு 12 சதவீதமாக அதிகரிக்கும்.

நடுத்தர மக்களும் விமானத்தில் பயணம் செய்வதற்கு ஏதுவாக வரி விகிதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன என துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

இந்த வரி விகிதத்தினால் உள்நாட்டு விமான போக்குவரத்து மேலும் உயரும். இந்த துறையின் வளர்ச்சிக்கு நல்லது என யாத்ரா நிறுவனத்தின் தலைமைச் செயல் பாட்டு அதிகாரி ஷரத் தல் தெரி வித்தார்.

முன்னதாக வரைவு ஜிஎஸ்டி மசோதாவில் 17 முதல் 18 சதவீத மாக வரி நிர்ணயம் செய்யப்பட்டி ருந்தது. தற்போது 5 மற்றும் 12 வரி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டிருப் பதால் இந்த துறையினர் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

SCROLL FOR NEXT