வணிகம்

லூபின் நிகர லாபம் 49% சரிவு

செய்திப்பிரிவு

மருந்து துறை நிறுவனமான லூபின் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 49 சதவீதம் சரிந்து ரூ.380.21 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.747 கோடியாக இருந்தது.

ஆனால் செயல்பாடுகளின் மூலம் கிடைக்கும் மொத்த வரு மானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் ரூ.4,197 கோடியில் இருந்து ரூ.4,253 கோடியாக உயர்ந்திருக்கிறது.

ஒட்டுமொத்த நிதி ஆண்டில் (2016-17) நிகர லாபம் சிறிதளவு உயர்ந்து ரூ.2,557 கோடியாக இருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.2,260 கோடியாக நிகர லாபம் இருந்தது. கடந்த நிதி ஆண்டில் மொத்த வருமானம் ரூ.17,494 கோடியாக இருக்கிறது. முந்தைய 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.14,255 கோடியாக இருந்தது.

ஒரு பங்குக்கு ரூ.7.50 டிவி டெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந் துரை செய்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் லுபின் பங்கு 1.77% வரை சரிந்து முடிந்தது.

SCROLL FOR NEXT