ஜப்பானைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான சாப்ட்பேங்க் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களான ஓலா, ஸ்நாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் இந்திய முதலீடுகள் மீதான நஷ்டம் ரூ.9,000 கோடியாக இருக்கிறது என சாப்ட்பேங்க் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
குறிப்பாக ஸ்நாப்டீல் நிறுவனத்தின் மோசமான செயல்பாடுகள் காரணமாக நஷ்டம் அதிகரித்திருப்பதாக அறிக்கை மூலம் சாப்ட்பேங்க் தெரிவித்திருக்கிறது. நிறுவனத்தின் நஷ்டத்தைக் குறைக்க அதனை பிளிப்கார்டுடன் இணைக்கவும் சாப்ட்பேங்க் திட்டமிட்டுவருவது குறிப்பிடத்தக்கது. ஓலா தவிர, ஓயா ரூம்ஸ், ஹைக், குரோபெர்ஸ், புராப்டைகர் உள்ளிட்ட சில நிறுவனங்களில் சாப்ட்பேங்க் முதலீடு செய்திருக்கிறது.