பங்குச்சந்தை ஏற்றத்தில் இருப்பதால் நிதிச்சேவை துறையில் இருக்கும் சில நிறுவனங்கள் பொதுப்பங்கு வெளியிட திட்டமிட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் சுமார் ரூ.20.000 கோடிக்கு பொதுப்பங்கு வெளியிட திட்டமிட்டிருக்கின்றன.
யூடிஐ மியூச்சுவல் பண்ட், எஸ்பிஐ லைப், பொதுத்துறை பொதுகாப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவையும் பங்கு வெளியீட்டில் தீவிரமாக இருக்கின்றன. தவிர ஹெச்டிஎப்சி லைப் நிறுவனமும் ஐபிஓ வெளியிட இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் சில நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட செபியை அணுகி இருக்கின்றன.
யூடிஐ மியூச்சுவல் பண்ட் நீண்ட காலமாகவே பொதுப்பங்கு வெளியிடுவதற்கு திட்டமிட்டு வருகிறது. தவிர நடப்பு நிதி ஆண்டில் ஐபிஓ வெளியிட எஸ்பிஐ லைப் திட்டமிட்டிருக்கிறது. மத்திய அரசின் பங்கு விலக்கல் இலக்குக்கு ஏற்ப, பொதுத்துறை பொதுகாப்பீட்டு நிறுவனங்களும் ஐபிஓ வெளியிடும்.
இந்தியாவில் இதுவரை எந்த மியூச்சுவல் பண்ட் நிறுவனமும் பொதுப்பங்கு வெளியிட்டதில்லை. யூடிஐ பட்டியலிடப்பட்டால், பட் டியலிடப்பட்ட முதல் மியூச்சுவல் பண்ட் நிறுவனமாக இது இருக்கும். காப்பீட்டு துறையை பொறுத்த வரை ஐசிஐசிஐ புரூடென்ஷியல் நிறுவனம் மட்டுமே பட்டியலிடப் பட்ட நிறுவனமாகும்.
எஸ்பிஐ லைப் பட்டியலிடு வதற்கு எஸ்பிஐ இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. அதேபோல ஹெச்டிஎப்சி ஸ்டாண் டர்டு லைப் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விலக்கிக் கொள்ள ஹெச்டிஎப்சி நிறுவனம் கொள்கை அளவிலான அனுமதியை வழங்கி இருக்கிறது.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஜிஐசி உள்ளிட்ட நிறுவனங்களில் 25% பங்குகளை விலக்கிக்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்திருக் கிறது.
செபியின் அனுமதிக்காக பல நிறுவனங்கள் விண்ணப்பித் திருப்பதால் இந்த ஆண்டு சில முக்கியமான நிறுவனங்களின் ஐபிஒ-கள் வெளியாகக்கூடும் என பங்குச் சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
குவாண்டம் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் இயக்குநர் ஐவி சுப்ர மணியம் கூறும்போது, சரியான விலையை நிர்ணயம் செய்திருக் கும் பங்குகளுக்கு முதலீட்டாளர் களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதேபோல அதிக விலையை நிர்ணயம் செய்யும் நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் தவிர்க்கிறார்கள் என கூறினார்.
கடந்த ஆண்டு 26 நிறுவனங் களின் பொதுப்பங்கு வெளியீடு நடந்தது. சுமார் ரூ.26,000 கோடி திரட்டப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக தொகை இதுவாகும்.