புதுடெல்லி: பணியாளர்கள் சங்கமான ‘‘என்ஐடிஇஎஸ்’’ கூறியுள்ளதாவது: பெங்களூருவை தலைமையிட மாகக் கொண்ட ஐடி சேவை நிறுவனமான விப்ரோ, தேர்வு செய்த புதிய பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம் (மாதத்துக்கு சுமார் ரூ.54,000) சம்பளம் வழங்குவதாக உறுதியளித்திருந்தது.
தற்போது அந்த சம்பளத்தை பாதியாக குறைத்துள்ள விப்ரோ நிறுவனம், இந்த சம்பளத்தில் பணியாற்ற விருப்பமா என்ற கேள்வியை புதிய பணியாளர் களிடம் எழுப்பியுள்ளது.
விப்ரோவின் இந்த நடவடிக்கை நியாயமற்றது மட்டுமின்றி வெளிப்படைத்தன்மையின் கொள்கைகளுக்கு எதிரானது. சம்பளத்தை பாதியாக குறைக்கும் முடிவை விப்ரோ மறுபரிசீலனை செய்து, தொழிற் சங்கத்துடன் அர்த்தமுள்ள வகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். இதன் மூலம், இருதரப்பும் பரஸ்பரம் பயனடையும் வகையில் தீர்வினைக் காண வேண்டும். இவ்வாறு என்ஐடிஇஎஸ் தெரிவித்துள்ளது.
இதனிடையே பணியாளர் களின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதியான பங்களிப்பை வழங்க தயாராக உள்ளதாகவும், புதிய பட்டாதாரிகளின் குழுவை வரவேற்பதற்கு ஆவலுடன் இருப்பதாகவும் விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.