போஷ் நிறுவனத்தின் பெங்களுரூ ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது. கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீஸ் காரணமாக இந்த ஆலையை மூடுவதாக நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
பெலந்தூர் ஏரி பகுதியில் இருக்கும் அனைத்து நிறுவனங் களையும் மூடுமாறு கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருக் கிறது. இதனைத் தொடர்ந்து இந்த ஆலை உடனடியாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக ஒரு நாளைக்கு 3.93 கோடி ரூபாய் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆலையை தொடர்ந்து நடத்துவதற்கான அனைத்து வாய்ப்புகளும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் தொடங்கு வதற்கு நடவடிக்கை எடுக்கப் படும். அதே சமயத்தில் வாடிக் கையாளர்களுக்கு உதிரிபாகங்கள் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது. சுகாதாரம் மற்றும் மாசு கட்டுப்பாடு விஷயத்தில் நிறுவனம் அதிகபட்சத்தை தரத்தினை கையாளுகிறது என்றும் போஷ் அறிவித்திருக்கிறது.