நாட்டிலேயே மிக நீளமான ஆற்றுப் பாலத்தை அசாம் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். இந்த பாலம் கட்டுவதற்கு தேவையான 90 சதவீத ஸ்டீலை பொதுத்துறை நிறுவன மான செயில் வழங்கியுள்ளது.
நாட்டிலேயே மிக நீளமான ஆற்றுப் பாலமான தோலா சதியா பாலம் பிரம்மபுத்திரா நதி யின் மேல் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் மொத்த நீளம் 9.15 கிலோ மீட்டர் இதன் மூலம் அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களுக்கு பயணிக்கும் நேரம் 4 மணி நேரமாக குறையும்.
இந்த பாலம் கட்டுவதற்கு தேவையான 90 சதவீத ஸ்டீலை அதாவது மொத்தம் 30,000 டன் ஸ்டீலை செயில் நிறுவனம் வழங்கி யுள்ளது. தனியார் அரசு கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பாலம் அமைக்கும் திட்டம் 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பாலம் மும்பையில் உள்ள பாந்த்ரா - வொர்லி கடல் இணைப்பு பாலத் தை விட பெரியது.
வட கிழக்கு பகுதியில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு செயில் நிறுவனம் ஸ்டீல் விநியோகம் செய்து வருகிறது.