வணிகம்

ஜிடிபி 7.9 % உயரும்: மார்கன் ஸ்டேன்லி

செய்திப்பிரிவு

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 2017-ம் ஆண்டு இறுதியில் 7.9 சதவீதமாக இருக்கும் என்று மார்கன் ஸ்டேன்லி ஆய்வறிக்கை கூறியுள்ளது. இந்திய பொருளாதரம் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சியை நோக்கி நகரத்தொடங்கியுள்ளது. வெளித் தேவைகளில் நிலவும் சாதகமான சூழல், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் காணப்படும் முன் னேற்றம், மற்றும் தனிநபர் நுகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்தியாவின் ஜிடிபி 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 7.9 சதவீதமாக இருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மார்கன் ஸ்டேன்லி ஆய்வறிக் கைபடி, அடுத்த மூன்று காலாண்டு களில் 1 சதவீத வளர்ச்சியை இந்தியா எட்டும். தற்போதைய 7 சதவீத ஜிடிபி மதிப்பிலிருந்து நடபாண்டுக்குள் 7.9 சதவீதம் என்கிற வளர்ச்சியை அடைவதற்கு ஏற்ப நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி வேகமெடுக் கும் என மார்கன் ஸ்டேன்லி எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளது. ”

வெளித் தேவைகள் அதிகரித் துள்ள சூழல் காரணமாக இந்த வளர்ச்சி சாத்தியம் என இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் நிறுவனங்களின் ஆண்டறிக்கை முடிவுகள் சிறப்பாக உள்ளன. தனிநபர் நுகர்வு திறன் அதிகரித்து வருவது போன்ற மூன்று முக்கிய காரணிகளும் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறியுள்ளது.

ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத் தப்படும்பட்சத்தில் இந்த வளர்ச் சியை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் என்றும் கூறியுள்ளது.

SCROLL FOR NEXT