வணிகம்

வருமான வரி ரிட்டர்ன் விண்ணப்பங்கள் புதுப்பிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வருமான வரி தாக்கல் செய்ய 2023 ஏப்ரல் 1 முதல் புதுப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதிஅறிவிக்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு வருமான வரி வரம்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய வரிமுறையின் கீழ் ரூ.7 லட்சம் வரையில் வரி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த நிதி ஆண்டில் மட்டும் 65 சதவீதம் பேர் புதிய வரிமுறைக்கு மாற வாய்ப்புள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்தது.

இந்நிலையில், வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய விண்ணப்பங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT