புனே: சிறுநீரக கல் சிகிச்சைக்கு ரூ.50,000 மதிப்பிலான காப்பீட்டு திட்டத்தை பஜாஜ் மார்கெட்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான காப்பீட்டு கட்டணம் ஆண்டுக்கு ரூ.499-லிருந்து தொடங்குகிறது.
பஜாஜ் மார்கெட்ஸ் நிறுவனம்காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தனி நபர்களுக்கான சிறுநீரக கல் சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில், சிறுநீரக கல் பிரச்சினைக்கு ரூ.50,000வரையில் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.