வணிகம்

பிஎஸ்இ நிகர லாபம் 3 மடங்கு உயர்வு

செய்திப்பிரிவு

பிஎஸ்இ நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 3 மடங்கு உயர்ந்து ரூ.72.66 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.20.24 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஆனால் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.190 கோடியாக இருந்த நிகர லாபம் இப்போது, ரூ.231 கோடியாக உயர்ந்திருக்கிறது.

ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ.265.09 கோடியாக இருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.177.13 கோடியாக நிகர லாபம் இருந்தது. கடந்த நிதி ஆண்டின் மொத்த வருமானம் ரூ.800.75 கோடியாக இருக்கிறது. 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.670 கோடியாக மொத்த வருமானம் இருந்தது.

SCROLL FOR NEXT