வணிகம்

சென்செக்ஸ் 145 புள்ளிகள் சரிவு

செய்திப்பிரிவு

எட்டு நாள் தொடர் ஏற்றத்துக்கு பிறகு இந்திய பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை சரிவுடன் முடிந்தன. கடந்த எட்டு வர்த்தக தினங்களில் 1265 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்திருந்த நிலையில் வெள்ளிக்கிழமை 145 புள்ளிகள் சரிந்து 26126 புள்ளியில் முடிந்தது. கடந்த எட்டு வர்த்தக தினங்களில் 376 புள்ளிகள் உயர்ந்த நிப்டியும் 40 புள்ளிகள் சரிந்து 7790 புள்ளியில் முடிந்தது. வியாழக்கிழமை சந்தை புதிய உச்சத்தை தொட்டதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக லாபத்தை வெளியே எடுத்தனர்.

மிட்கேப் குறியீடு 1.28 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 1.88 சதவீதமும் சரிந்து முடிவடைந்தன. ரியால்டி, மெட்டல், பவர், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஆயில் அண்ட் கேஸ் உள்ளிட்ட துறை களின் பங்குகளில் லாபத்தை வெளியே எடுக்கும் போக்கு இருந்ததால் பங்குச்சந்தைகள் சரிந்தன.

SCROLL FOR NEXT