வணிகம்

அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் கலைப்பு

பிடிஐ

அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஒப்பு தல் வழங்குவதற்காக உருவாக் கப்பட்ட அந்நிய முதலீட்டு மேம் பாட்டு வாரியத்தை (எப்ஐபிபி) மத்திய அரசு கலைத்திருக்கிறது. இதற்கான முடிவினை மத்திய அமைச்சரவை நேற்று எடுத்தது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல் பட்டு வந்த இந்த அமைப்பு கலைக்கப்பட்டிருக்கிறது. தற் போது ரூ,5,000 கோடிக்கு கீழ் இந்தியாவுக்கு வரும் அந்நிய நேரடி முதலீட்டினை இந்த அமைப்பு பரிசீலனை செய்து, அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கும்.

பிரதமரின் நேரடி கண்காணிப்பு

நிதி அமைச்சகத்தின் பொருளா தார விவகாரங்களுக்கு கீழ் இந்த துறை செயல்பட்டு வந்தது. 1990களின் தொடக்கத்தில் பொரு ளாதார சீர்த்திருத்த நடவடிக் கைகள் தொடங்கப்பட்ட சமயத்தில் இந்த வாரியம் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிரதமர் அலுவலகம் இந்த பிரிவினை நேரடியாக கவனித்துக்கொண்டது. 1996-ம் ஆண்டு வர்த்தக துறைக்கு மாற்றப்பட்டது. 2003-ம் ஆண்டு நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகார பிரிவுக்கு மாற்றப்பட்டது.

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் அறிவிப்பில் இந்த அமைப்பு கலைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். தற்போது 91-95 சதவீத அந்நிய முதலீடு நேரடியாக வருகிறது. பாதுகாப்பு, ரீடெய்ல் உள்ளிட்ட 11 துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அரசின் அனுமதி தேவை. புதிய விதிமுறைகளின் படி, சம்பந்தபட்ட அமைச்சகம் அந்நிய முதலீடு தொடர்பான முடிவை எடுக்க முடியும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு தொடர் பாக 21 துறைகளில் 87 விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. கடந்த நிதி ஆண்டில் 6,010 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடு இந்தியா வுக்கு வந்திருக்கிறது.

SCROLL FOR NEXT