வணிகம்

ஆட்டிறைச்சி துறையில் தன்னிறவு காண காஷ்மீரில் ரூ.329 கோடி திட்டத்துக்கு அனுமதி

செய்திப்பிரிவு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் அரசு ஆட்டிறைச்சி துறையில் தன்னிறைவு அடைய தீவிரமாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைய ரூ.329 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கை காரணமாக யூனியன் பிரதேசத்தில் 122 நிறுவனங்கள் தொடங்கப்படும் என்பதுடன் 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதுகுறித்து வேளாண் உற்பத்தி துறை கூடுதல் தலைமை செயலர் அடல் துல்லோ கூறுகையில், “காஷ்மீரில் உள்ள மக்களின் உணவு வகைகளில் ஆட்டிறைச்சி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இவற்றின் இறக்குமதி அதிகமாக உள்ளதால் செலவு அதிகரிக்கிறது.

எனவே அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.329 கோடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அளவில் உள்ளூர் ஆட்டிறைச்சி தயாரிப்பை ஊக்குவித்து இறக்குமதியை குறைப்பதே இலக்கு. இதன் மூலம் ஆட்டிறைச்சி துறையில் தன்னிறைவு நிலை எட்டப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT