சிறிய நகரங்களில் மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 41 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
மியூச்சுவல் பண்ட்களுக்கு வரும் முதலீடுகள் இந்தியாவின் பெரிய 15 நகரங்களில் இருந்தே வருகிறது. இந்த நகரங்களைத் தாண்டி, மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை 41 சதவீதம் உயர்ந்து ரூ.3.09 லட்சம் கோடியாக இருக்கிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.2.18 லட்சம் கோடி மட்டுமே இருந்ததாக இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவின் அனைத்து பகுதி களுக்கும் மியூச்சுவல் பண்டினை விரிவுபடுத்த செபி பல நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் சிறிய நகரங்களில் கூடுதல் தொகையை விழிப்புணர்வுக்காக செலவு செய்ய செபி அனுமதி வழங்கி இருக்கிறது. மியூச்சுவல் பண்ட் கையாளும் சொத்து மதிப்பில் சிறிய நகரங்களில் பங்கு தற்போது 17 சதவீதம் மட்டுமே.
முதல் 15 நகரங்களில் புதுடெல்லி, மும்பை, கொல் கத்தா, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்கள் உள்ளன.