கார்போரண்டம் யுனிவர்சல் லாபம் ரூ.42.26 கோடி
முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த கார்போரண்டம் யுனிவர்சல் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் ரூ.42.26 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.41.88 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஆனால் ஒட்டுமொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் உயர்ந்திருக்கிறது. 2015-16-ம்
நிதி ஆண்டில் ரூ.139.69 கோடியாக இருந்த நிகர லாபம் இப்போது ரூ.164.69 கோடியாக உயர்ந்திருக்கிறது.
மார்ச் காலாண்டு நிகர லாபம் ரூ.592 கோடி. ஒட்டு மொத்த நிதி ஆண்டு மொத்த வருமானம் ரூ.2,232 கோடி.
ஒரு பங்குக்கு 0.75 ரூபாய் இறுதி டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ஒரு ரூபாய் வழங்கப்பட்டது. நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில் இந்த பங்கு 1.99 சதவீதம் உயர்ந்து முடிந்தது.
சிண்டிகேட் வங்கிநிகர லாபம்ரூ.104 கோடி
பொதுத்துறை வங்கியான சிண்டிகேட் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் ரூ.104 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,158 கோடி அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ.359 கோடியாக இருக்கிறது. கடந்த
2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.1,643 கோடி அளவுக்கு நஷ்டம் இருந்தது.
மார்ச் காலாண்டு மொத்த வருமானம் ரூ.6,913 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.6,525 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 6.70 சதவீதத்தில் இருந்து 8.50 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 4.48 சதவீதத்தில் இருந்து 5.21 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 0.66 சதவீதம் இந்த பங்கு உயர்ந்தது.
தேனா வங்கிநஷ்டம் ரூ.575 கோடி
பொதுத்துறை வங்கியான தேனா வங்கியின் மார்ச் காலாண்டு நஷ்டம் ரூ.575 கோடியாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.326 கோடியாக நஷ்டம் இருந்தது.
வங்கியின் மொத்த வருமானமும் சரிந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,853 கோடியாக இருந்த மொத்த வருமானம், தற்போது ரூ.2,612 கோடியாக சரிந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 16.27 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு 9.98 சதவீதமாக இருந்தது. நிகர வாராக்கடனும் 6.35 சதவீதத்தில் இருந்து 10.66 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர நஷ்டம் ரூ.864 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் ரூ.935 கோடி நஷ்டம் இருந்தது. நேற்றைய வர்த்தகத்தில் 5.91 சதவீதம் அளவுக்கு இந்த பங்கு சரிந்தது.
விஜயா வங்கி லாபம் 3 மடங்கு உயர்வு
பொதுத்துறை வங்கியான விஜயா வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 3 மடங்கு உயர்ந்து ரூ.204 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகரலாபம் ரூ.71.31 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானமும் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.3,228 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.3,504 கோடியாக இருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ.750 கோடியாக இருக்கிறது. கடந்த 2015-16-ம்
நிதி ஆண்டில் ரூ.381.80 கோடி
யாக இருந்தது. 2015-16-ல் ரூ.12,957 கோடியாக இருந்த மொத்த வருமானம், கடந்த நிதி ஆண்டில் ரூ.14,030 கோடியாக இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 6.59 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 4.35 சதவீதமாகவும் இருக்கிறது. ஒரு பங்குக்கு 1.50 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.