வணிகம்

பிப்.1, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சனிக்கிழமை (பிப்.11) சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.42,720-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த மூன்று நாட்களாக குறைந்து வந்தது. இந்நிலையில், தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ரூ.5,340-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.42,720-க்கு விற்பனையாகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.46,600-க்கு விற்பனையாகிறது. இதேபோல, ஒரு கிராம் வெள்ளி ரூ.72.70-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.72,700-ஆக இருக்கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT