மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 39 புள்ளிகள் சரிந்து 60,624 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி34 புள்ளிகள் சரிவடைந்து 17,837 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாகத் தொடங்கின. காலை 09:51 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 107.77 புள்ளிகள் சரிவடைந்து 60,556.02ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 72.60 புள்ளிகள் உயர்வடைந்து17,799.10 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளில் நிலவும் பாதகமான சூழல், மத்திய வங்கிகளின் வட்டி விகித உயர்வு போன்ற காரணங்களால் இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை வீழ்ச்சியுடனேயே தொடங்கின.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எல் அண்ட் டி, ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ், எம் அண்ட் எம். நெஸ்ட்லே இந்தியா பங்குகள் உயர்வில் இருந்தன. மறுபுரம் ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டைட்டன் கம்பெனி, ஹெச்டிஎஃப்சி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, விப்ரோ பங்குகள் சரிவில் இருந்தன.