மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 378 புள்ளிகள் (0.63 சதவீதம்) உயர்வடைந்து 60,664 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி150 புள்ளிகள் (0.85 சதவீதம் ) உயர்வடைந்து 17,872 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. காலை 09:58 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 412.59 புள்ளிகள் உயர்வடைந்து 60,698.63 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 119.50 புள்ளிகள் உயர்வடைந்து 17,841.00 ஆக இருந்தது.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு தனது அறிக்கையை இன்று வெளியிட்டது. அதன்படி ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதிகமாக்கி வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாக உயர்த்தி உள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட உயர்வுதான் என்ற போதிலும் உலோகம், எரிவாயு போன்ற பங்குகளின் உயர்வினால் இந்திய பங்குச்சந்தைகள் இரண்டு நாள் வீழ்ச்சிக்கு முடிவுகட்டி ஏற்றத்தில் நிறைவடைந்தன.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 377.75 புள்ளிகள் உயர்வடைந்து 60,663.79 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 150.20 புள்ளிகள் உயர்வடைந்து 17,871.70 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், விப்ரோ, டாடா மோட்டார்ஸ், டைட்டன் கம்பெனி ஐடிசி, டைட்டன் கம்பெனி, ஐடிசி, எம் அண்ட் எம், ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி, நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல்ஸ் பங்குகள் உயர்வடைந்திருன. ஹிந்துஸ்தான் யுனிலீவர், எல் அண்ட் டி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.