கோப்புப்படம் 
வணிகம்

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 412 புள்ளிகள் உயர்வு

செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (புதன்கிழமை) வர்த்தகம் ஏற்றத்தில் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வடைந்து 60,494 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 67 புள்ளிகள் உயர்வடைந்து 17,788 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் புதன்கிழமை வர்த்தகம் உயர்வுடன் தொடங்கின. காலை 09:58 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 412.59 புள்ளிகள் உயர்வடைந்து 60,698.63 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 119.50 புள்ளிகள் உயர்வடைந்து 17,841.00 ஆக இருந்தது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை அறிக்கை புதன்கிழமை வெளியாக உள்ளது. முதலீட்டாளர்கள் அதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்தில் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்,விப்ரோ, டைட்டன் கம்பெனி, ஹெச்டிஎப்சி, ஏசியன் பெயின்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், ஐடிசி, எம் அண்ட் எம், நெஸ்ட்லே இந்தியா பங்குகள் உயர்வில் இருந்தன. எல் அண்ட் டி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா ஸ்டீல் பங்குகள் சரிவில் இருந்தன.

SCROLL FOR NEXT