புதுடெல்லி: மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைஅமைச்சகம், கடந்த 5 ஆண்டுகளில், தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் வசூலான சுங்கக் கட்டணம் குறித்து புள்ளிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல்2018 – டிசம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில் ரூ.1.5 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.
அதிகபட்சமாக. உத்தர பிரதேசத்தில் ரூ.17,243 கோடி, ராஜஸ்தானில் ரூ.16,566 கோடி வசூலாகி உள்ளது. இவற்றைத் தொடர்ந்து குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் சுங்கக் கட்டணம் வசூலாகி உள்ளது. மொத்த வசூலில் இந்த 5 மாநிலங்களின் பங்களிப்பு 50 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதுமாக 2021-22 நிதி ஆண்டில் ரூ.33,881 கோடி சுங்கக் கட்டணம் வசூலானது. எனினும், நடப்பு நிதி ஆண்டில் வசூல் உச்சம் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2022-23 நிதி ஆண்டில் டிசம்பர் வரை யிலான மூன்று காலாண்டுகளில் மட்டும் ரூ.33,489 கோடி வசூலாகி உள்ளது.