வணிகம்

கடந்த வாரத்தில் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.93,225 கோடி உயர்வு

பிடிஐ

அதிக சந்தை மதிப்பு கொண்ட 10 நிறுவனங்களில் 8 நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு கடந்த வாரம் ரூ.93,225.53 கோடி உயர்ந்துள்ளது.

எஸ்பிஐ மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்கள் தவிர மற்ற நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது. இதில் ஹெச்டிஎப்சி, டிசிஎஸ், ஐடிசி உள்ளிட்ட 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த வாரம் அதிகரித்துள்ளது.

ஐடிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.27,635 கோடி உயர்ந்துள் ளது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக சந்தை மதிப்பு உயர்வை ஐடிசி நிறுவனம் கண்டிருக்கிறது.

ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.16,864.28 கோடி உயர்ந்திருக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.14,285 கோடி உயர்ந்துள்ளது.

ஆனால் எஸ்பிஐ வங்கியின் சந்தை மதிப்பு ரூ.15,976 கோடி சரிவை கண்டுள்ளது. ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5,389 கோடி சரிந்துள்ளது.

அந்நிய முதலீடு ரூ.24,776 கோடி

நடப்பு மாதத்தில் அந்நிய நிறுவன முதலீடு 400 கோடி டால ராக வந்துள்ளது.. பல்வேறு பொருட் களுக்கு ஜிஎஸ்டி விகிதத்தை இறுதி செய்தது மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவாக இருந்தது போன்ற காரணங்களால் மே மாதத்தில் அந்நிய நிறுவன முதலீடு 400 கோடி டாலராக இருக்கிறது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர் கள் கடன் சந்தையில் அதிக முதலீடு செய்துள்ளனர். சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி, மே மாதம் 2-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை பங்குச் சந்தையில் ரூ.9,007 கோடி முதலீடு செய்துள்ளனர். இருந்த போதிலும் இதே காலக்கட்டத்தில் கடன் சந்தையில் ரூ.15,769 கோடி முதலீடு செய்திருக்கின்றனர். மொத்த அந்நிய நிறுவன முதலீடு ரூ.24,776 கோடி (385 கோடி டாலர்) இந்தியாவுக்கு வந்துள்ளது.

SCROLL FOR NEXT