நாட்டின் சில்லரை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 2.99% அளவுக்கு குறைந்துள்ளது. மார்ச் மாதத்தில் 3.89% சதவீதமாக இருந்தது. திருத் தப்பட்ட ஒட்டுமொத்த விலைக் குறியீட்டெண் (டபிள்யூபிஐ) அடிப் படையிலான பணவீக்கம் 2011-12-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டது.
தொழில் கொள்கை மேம்பாட்டு அமைப்பு டபிள்யூபிஐ மதிப்பீடு செய்துள்ளது. இப்பிரிவு ஒவ்வொரு பொருளுக்குமான விலையை மதிப்பீடு செய்தது. இதன்படி பொரு ளின் உற்பத்தி வரியை தவிர்த்து பணவீக்கம் கணக்கிடப்பட்டது. முதல் முறையாக நிதிக் கொள்கை யில் செய்யப்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் உற்பத்தி வரி தவிர்த்து பொருள்களின் பணவீக்கம் மதிப்பிடப்பட்டது. இது தவிர இத்துறை ஒரு ஆய்வுக் குழுவை ஏற்படுத்தயுள்ளது. இக்குழு தொடர் இடைவெளியில் பொருள்களின் விலையைக் கண்காணிக்கும்.
சில்லரை பணவீக்கம் மற்றும் ஒட்டுமொத்த விற்பனை விலை குறியீட்டெண் ஆகியன குறைந்தால் அதன் விளைவாக கடனுக்கான வட்டியைக் குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். ஏனெனில் இந்த பட்டியலில் உணவுப் பொருள் மற்றும் எரிபொருள் ஆகியன இடம் பெறவில்லை. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது இடைக் கால கடன் கொள்கையில் பண வீக்கத்தை 4 சதவீதத்துக்குள் கட்டுப் படுத்த இலக்கு நிர்ணயித்திருந்தது.
அடுத்து வரும் மாதங்களில் நாட்டின் பருவமழையைப் பொறுத்தே பணவீக்க விகிதம் அமையும். கடந்த வாரம் இந்திய வானியல் துறை தனது அறிக்கையில் பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும் என தெரிவித்துள்ளது. இதனால் எல்நினோ ஏற்படும் பாதிப்புகள் குறித்த அச்சம் நீங்கியுள்ளது. மேலும் வறட்சி நிலை உருவாகாது என்ற சூழலும் ஏற்பட்டுள்ளது.
பருவமழை போதிய அளவு இல் லாததால் கடந்த மூன்று ஆண்டு களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உணவுப் பொருள்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியிருந்தது.
இது தவிர 2016-17-ம் ஆண்டுக் கான உணவு உற்பத்தி குறித்த விவரத்தை மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் சாதனை அளவாக 27.33 கோடி டன் உற்பத்தி இருந்ததாகவும் முந்தைய அளவான 27.19 கோடி டன் அளவைக் காட்டிலும் அதிகம் என தெரிவித்துள்ளது. இதனால் வரும் மாதங்களில் உணவுப் பொருள்களின் விலை குறையும் என பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.