வணிகம்

எக்ஸ்இ செடான் டீசல் மாடலை அறிமுகம் செய்தது ஜாகுவார்

செய்திப்பிரிவு

ஜாகுவார் லாண்ட் ரோவர் நிறுவனம் புதிய ஜாகுவார் எக்ஸ்இ செடான் டீசல் காரை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த கார் 2 லிட்டர் இன்ஜின் கொண்டுள்ளது. 123 கிலோவாட் சக்தியை வெளிப்படுத்தும்.

இந்த காரை அறிமுகப்படுத்தி பேசிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரோஹித் சூரி, ஜாகுவார் கார்களின் வரிசையில் எக்ஸ்இ செடான் வெற்றிபெற்ற மாடலாகும். இந்தியாவில் சிறந்த வாடிக்கையாளர் கட்டமைப்பை வைத்துள்ளோம். இதனடிப் படையில் தொடர்ந்து விரிவாக்க பணிகளை மேற்கொள்வோம் என்று கூறினார்.

விமான துறையில் பயன்படுத்தப்படும் எடை குறைந்த அலுமினியம் கொண்டு ஜாகுவார் கார்கள் உருவாக்கப்படுகின்றன. எக்ஸ்இ செடன் காரில் இதர சொகுசு வசதிகளுடன் 8 -ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ் மிஷன், அனைத்து தரைகளிலும் கண்ட்ரோல் செய்யக்கூடிய பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட நவீன வசதிகளும் உள்ளன என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த காரின் டெல்லி விற்பனையக விலை ரூ.38.25 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.

ஜாகுவார் லாண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். எக்ஸ்இ செடான் வரிசையில் பெட்ரோல் மாடலை ஏற்கனவே 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தி யுள்ளது. இதன் டெல்லி விற் பனையக விலை 37.25 லட்சத்தி லிருந்து தொடங்குகிறது.

SCROLL FOR NEXT