வணிகம்

ஜியோமி 40 லட்சம் ஸ்மார்ட் போன் விற்று சாதனை

செய்திப்பிரிவு

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்ன ணியில் திகழும் சீன நிறுவனமான ஜியோமி 9 மாதங்களில் 40 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து சாதனை புரிந்துள்ளது. ஆன்லைன் மூலமாக இந்த அளவுக்கு மிக அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன் விற்பனையாகியுள்ளது புதிய சாதனையாகும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.6,999 ரூபாய்க்கு ரெட்மி 3 எஸ் எனும் ஸ்மார்ட்போனை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான விலையிலான ஸ்மார்ட்போன் பிரிவில் இது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

பிரீமியம் பிரிவில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் 5 அங்குல ஹெச்டி திரையையும், 144 கிராம் எடையும் கொண்டதாக முந்தைய 2 மாடலை விட 10 சதவீதம் மெலிதாகவும் இருந்ததால் இதற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் 128 ஜிபி வரை நினைவக விரிவாக்க வசதியும் இருந்தது கூடுதல் சிறப்பம்சமாக அமைந்ததாக நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT